இன்று மேலுமொரு தொகுதி லிட்ரோ எரிவாயு நாட்டிற்கு வருகிறது!

Date:

மேலும் 3,800 மெட்ரிக் தொன் எரிவாயு இன்று இரவு நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பரிசோதித்ததைத் தொடர்ந்து நாளை காலை எரிவாயுவை இறக்கும் பணி ஆரம்பிக்கும் என எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 22 நாட்களில், லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2.7 மில்லியன் வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்துள்ளது என்பதையும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று முதல் குறைக்கப்படும்.

அதன்படி இன்று 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200க்கு மேல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிவாயு விலை இன்று குறைவடையும் என பீரிஸ் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அச்சினி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

அருணா விதனகமகே (என்கிற கஜ்ஜா’) மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை...

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண்...

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்