ஒன்றாக மது அருந்திவிட்டு நண்பனிற்கு துரோகமிழைத்த மட்டக்களப்பு இளைஞன்: போதையில் மட்டையான நண்பனின் மனைவியை தட்டியெழுப்பியர் கைது!

Date:

மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று முன்தினம் (06) உத்தரவிட்டார்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நண்பன் ஒருவரின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி இரவு நண்பனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் அங்கு கதைத்துக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் நண்பர்கள் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

போதையின் உச்சத்தில் கணவன் வீட்டிற்கு வெளியில் உறங்கியுள்ளார். நண்பன் வீட்டின் முன்பக்கத்தில் உறங்கியுள்ளனர்.  நண்பனின் மனைவி அறையில் கதவை பூட்டாது அறைக்குள் தனிமையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் நண்பனின் மனைவி உறங்கி கொண்டிருந்த அறைக்கு சென்ற இளைஞன் அவரை எழுப்பி, உல்லாசமாக இருக்க வருமாறு  அழைத்துள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அவரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் மதுபோதையில் இருந்த கணவன் காலையில் நித்திரையில் இருந்து எழுந்த போது மனைவியின் முகத்தில் உள்ள வீக்கத்தை கண்டு வினவிய நிலையில் மனைவி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தம்பதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதன்படி, பொலிசார் குறித்த இளைஞனை நேற்று கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகரை பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஜஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது

ஏறாவூரில்   உணவக உரிமையாளர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை பழிவாங்க வேண்டி...

ஏறாவூர் தன்னமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை–

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்