ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு எதிராக வவுனியா பாடசாலைகளில் போராட்டம்!

Date:

இலங்கை ஆசிரியர்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு எதிராக வவுனியாவில் ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

காலை.10.30 மணியளவில் பெரும்பாலான பாடசாலைகளில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது-

ஜனநாயக ரீதியாக உரிமைக்காக போராடிய எமது பொதுச்செயலாளர் முறையற்ற விதத்திலே கைதுசெய்யப்பட்டுள்ளார். அதற்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவர் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம்.

அத்துடன் இந்தஅரசு அவசரகாலச்சட்டத்தினை உடனடியாக நீக்கி நாட்டில் ஜனநாயக தன்மையை உறுதிசெய்யவேண்டும். தேவையற்ற கைதுகளை தவிர்க்கவேண்டும். எமது பொதுச்செயலாளர் உடனடியாக விடுவிக்கப்படாவிடில் நாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை கூறிக்கொள்கின்றோம் என்றனர்.

ஆர்பாட்டத்தில் வவுனியா வெளிக்குளம் மகாவித்தியாலம், இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியலாம், சைவிப்பிரகாசா மகளீர் பாடசாலை, முஸ்லீம் மகாவித்தியாலம், தமிழ் மத்திய மகாவித்தியாலம் உட்பட பெரும்பாலான பாடசாலைகளில் குறித்த கண்டன ஆர்பாட்டம் இன்று இடம்பெற்றது.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்