27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
கிழக்கு

சண்முகா ஹபாயா வழக்கு: கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி பிணையில் விடுதலை

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் கல்லூரி அதிபர் இன்று (4) இரண்டரை லட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சென்ற பெப்ரவரி மாதம் 02ம் திகதி திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடமையேற்பதற்காக சென்றிருந்த பஹ்மிதா றமீஸ் என்ற ஆசிரியை, தன்னை கடமையேற்க விடாது பல குழப்பங்களை ஏற்படுத்தப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, அவர் பாடசாலையில் ஹபாயா அணிந்து வருவதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தனது சட்டரீதியான கடமையை செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பெயரின் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றால் அனுப்பப்பட்ட அழைப்பாணையினைத் தொடர்ந்து வழக்கு இன்று (4) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதிபருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது. இரு தரப்பு சட்டத்தரணிகளின் கடுமையான வாதப்பிரதி வாதங்களைத் தொடர்ந்து வழக்கு நீதிபதியினால் விசாரணைக்கு (Trial) எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸ்ஸான் றுஷ்தி, ஸாதிர் முகம்மட் மற்றும் எம்.எம்.ஏ.சுபாயிர் ஆகியோர் முன்னிலையாகி வருகின்றனர்.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

10ம் கட்டை ஹோட்டலில் தீ!

east tamil

காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

east tamil

மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேகம்

east tamil

இலங்கைத்துறை முகத்துவாரத்தில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

east tamil

மாடு மேய்க்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

Pagetamil

Leave a Comment