சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நோக்கி பயணித்ததாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கடற்படை மற்றும் வென்னப்புவ பொலிஸாரினால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கு கடற்படை கட்டளை மற்றும் வென்னப்புவ பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தில் மூன்று வேன்களை சோதனையிட்டதன் பின்னர் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்ட 37 ஆண்களும் 6 பெண்களும், 4 சிறார்களும் கைதாகியுள்ளனர்.
அவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, புத்தளம், சிலாபம், மாரவில, மஹாவெவ, முந்தல் மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.