முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை படுக்கை விரிப்பாக பாவித்து சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட நபர் ஒருவர் தனது சட்டத்தரணி ஊடாக வெல்லவீடிய பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சந்தேக நபர் இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர் என்பதுடன் தொழிற்சங்கத் தலைவராகவும் செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




