இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ருவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜேசேகர, மின்சாரசபையின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் வழங்கல் செயல்பாடுகளை பிரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஒப்புதலுக்காக சமர்பிக்க நம்புவதாக தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற மின்துறையின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.
2014 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மின்சார சபை புதிய பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் எதனையும் ஆரம்பிக்கவில்லை அல்லது செயற்படுத்தவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே மின் துறையை புத்துயிர் பெறுவதற்கான முன்னோக்கி வழி என்று அவர் வலியுறுத்தினார், இருப்பினும் இதுபோன்ற திட்டங்களை எளிதாக்குவதற்கான அணுகுமுறை பயங்கரமானது.
மின்சார விநியோகத்திற்கும் கட்டண திருத்தங்கள் தேவை என அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் ஒரு திட்டத்துடன் சீரமைப்புகள் செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.




