பாராளுமன்ற சபை முதல்வர் மற்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஆகியோரை அரசாங்கம் நியமித்துள்ளது.
சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1