24.6 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

வழக்கிலிருந்து ரணில் விடுவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நிதி முறைகேடுகள் மற்றும் தவறான பொருளாதார மேலாண்மைக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அவருக்கு ஜனாதிபதி விதிவிலக்கு பொருந்தாது என்பதால், இந்த மனுக்களில் பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முன நோட்டீஸ் வழங்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் ஜெஹான் கனக ரெட்ன உள்ளிட்டவர்களால் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அப்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்டவர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுவில் பிரதிவாதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அவருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்ய மனுதாரர்கள் எதிர்பார்க்கவில்லை என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தக ஜயசுந்தர நீதிமன்றில் அறிவித்தார். இதன்படி நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்குமாறு அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

உண்மைகளை கருத்திற்கொண்டு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம், ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்த தீர்மானித்ததுடன், இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆகியோர் ஆஜராகினர்.

சட்டமா அதிபர் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே ஆஜரானார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயர்தரத்தில் கல்வி பயிலும் போதே மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலகுவது ஏன்? – ஹரிணி அமரசூரிய

east tamil

இலங்கையில் பிறப்பு வீதம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

east tamil

யாழில் புதுவருட அட்டகாசம்: வீதியில் சென்றவர்களை காரணமேயில்லாமல் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது!

Pagetamil

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

Leave a Comment