இன்று நடைபெறவுள்ள அரசாங்கத்தின் நாடாளுமன்ற குழு கலந்துரையாடலில் தமது தரப்பினர் கலந்துகொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாணயக்கார, தனக்கும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் தற்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நிலையில் அவர் கலந்து கொள்ள போவதில்லை எனவும் தெரிவித்தார்.
அரசாங்கக் குழுக் கூட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் மேலும் வினவிய போது, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையின் கீழ் இந்த சந்திப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தாம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை என்றும், தற்போது எதிர்க்கட்சி உறுப்பினராகவும் உள்ளதாகவும், அதனால் தான் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.