யாழ்ப்பாணத்திலிருந்து காற்று நிரப்பப்பட்ட படகில் தமிழகத்திற்குள் நுழைந்த போலந்து நாட்டவர் கைது!

Date:

யாழ்ப்பாணத்திலிருந்து காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்ரிக் படகில் தமிழகத்திற்குள் இரகசியமாக நுழைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த முனாங்காடு பகுதியில் நேற்று காலை காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.  13 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட இந்த படகில் இலங்கையில் பயன்படுத்தப்படும் தண்ணீர்ப் போத்தல்கள், படகு துடுப்புகள், லைப் ஜாக்கெட், பயணப்பை, ஒரு ஜோடி காலணிகள் ஆகியவை  கைப்பற்றப்பட்டுள்ளன.

தகவலறிந்து வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கப்பற்படை அதிகாரிகள், கடற்கரையில் ஒதுங்கியுள்ள படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாகையிலிருந்து மோப்ப நாய் ஒன்று சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, படகை மோப்பம் பிடித்துவிட்டு, பின் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் நுழைந்து ஓடியது.

இந்த நிலையில், படகில் வந்த நபர் காட்டுப்பகுதியில் படுத்திருந்த பின்னர், நேற்று இரவு கிராமத்திற்குள் வந்து, சென்னை செல்லும் வழியை கேட்டுள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த நபரை பொலிசார் கைது செய்தனர்.

கைதானவர் போலந்து நாட்டவர். 38 வயதான அவர் மீது இலங்கை, மாத்தறை மாவட்டம், வெலிகம பொலிஸ் பிரிவில் குற்றவழக்கு நிலுவையில் உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால், சொந்த நாட்டிற்கு செல்ல, சட்டவிரோதமாக தமிழகம் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதிக்கு சென்று, அங்கிருந்து படகில் தமிழகம் சென்றுள்ளார்.

சென்னை ஊடாக டில்லியில் உள்ள போலந்து தூதரகத்திற்கு செல்ல முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

“சிறிமாவோவிடம் ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள்”: அரசியல் எதிரிகளை நடத்தும் விதம் குறித்து அரசாங்கத்திற்கு தயாசிரி எச்சரிக்கை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட...

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்