பிரபல நடிகருடன் இளம் நடிகை காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென காரை வழிமறித்த நடிகரின் மனைவி, நடிகையை அடித்துக் கலைத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஒடிசா திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரக்ருதி மிஸ்ரா. சமீபத்தில் பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடிகர் தன்மெ மொஹந்தியுடன் சேர்ந்து நடித்திருந்தார்.
நடிகை மிஸ்ரா நடிகர் தன்மெ மொஹந்தியுடன் புபனேஷ்வர் விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். வழியில் அவர்களின் காரை மொஹந்தியின் மனைவி திருப்தி மடக்கினார்.
பின்னர் காரிலிருந்த நடிகை மிஸ்ரா, நடிகர் மொஹந்தி இருவரையும் திருப்தி அடித்து உதைத்தார். அதோடு நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து காரிலிலிருந்து வெளியில் இழுத்தார். அடி உதையிலிருந்து தப்பிக்க காரை விட்டு வெளியில் வந்த மிஸ்ராவை ரோட்டில் வைத்து திருப்தி அடித்து உதைத்தார். இதனால் மிஸ்ரா அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நோக்கி ஓடினார். அவரை திருப்தி விரட்டிச் சென்றார்.
பின்னர் அவரிடமிருந்து தப்பித்து நடிகை மிஸ்ரா ஆட்டோவில் ஏறி தப்பித்தார்.
பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தை பொதுமக்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட அந்த வீடியோக்கள் வைரலாகி இருக்கின்றன.
மிஸ்ராவுக்கும், நடிகை மொஹந்திக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருப்பதாக அவர் மனைவி குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து நடிகை மிஸ்ராவின் தாயார் போலீஸில் புகார் செய்தார்.
புபனேஷ்வர் துணை போலீஸ் கமிஷனர் பிரதீக் சிங் கூறுகையில், ”நடிகை மிஸ்ராவும், மொஹந்தியும் பட விளம்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை செல்ல விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மொஹந்தியின் மனைவி திருப்தி சில ரௌடிகளுடன் வந்து அடித்து உதைத்ததாக மிஸ்ராவின் தாயார் புகார் கொடுத்திருக்கிறார். அது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
இது குறித்து நடிகர் மொஹந்தி கூறுகையில், ”நானும் நடிகை மிஸ்ராவும் விமான நிலையத்திற்கு சென்ற போது வழியில் என் மனைவியும், அவர் தந்தையும் காரை மடக்கி எங்களை அடித்தனர். நடிகை மிஸ்ரா எனக்கு சிறு வயதிலிருந்தே நல்ல தோழி. ஆனால் என் மனைவிக்கு திரைப்படத்துறையில் நம்பிக்கை இல்லை” என்று தெரிவித்தார்.
ବିଚ ରାସ୍ତାରେ ଓଲିଉଡ଼ ଅଭିନେତା ଅଭିନେତ୍ରୀଙ୍କ ହାଇ ଡ୍ରାମା!
ବିଚ ରାସ୍ତାରେ ପ୍ରକୃତି ମିଶ୍ରଙ୍କୁ ମାଡ ମାରିଲେ ବାବୁଶାନଙ୍କ ପତ୍ନୀ! #babushaan@otvnews @kanak_news @ArgusNews_in pic.twitter.com/5l9x0ZvR4D— Sujata Padhi (ଧାରା) (@PadhiSujata24) July 23, 2022
நடிகை மிஸ்ரா அளித்த பேட்டியில், ”நானும், நடிகர் மொஹந்தியும் வெறும் நண்பர்கள் மட்டுமே. தற்போது நடந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது” என்றார்.