பொல்கஹவெல, தமுனுபொல பிரதேசத்தில் வீடொன்றில் தனிமையில் இருந்த பெண்ணொருவர் நேற்று (20) பிற்பகல் படுகொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த இரண்டு காதணிகளும், வீட்டிலிருந்த பல பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூதாட்டியின் காதுகள் வெட்டப்பட்டு, தோடுகள் கழற்றியெடுக்கப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்த ரூ.75,000 மதிப்புள்ள மடிக்கணினி, 15,000 ரூபா பணமும் களவாடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்த பெண்ணின் மகள் மதியம் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் தாய் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்தேன்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பொல்கஹவெல பொலிஸார் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1