அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் சுமுது பிரசன்னவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் மீது மக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த முறைப்பாடுகளை அடுத்து இந்த இடமாற்றம் பொலிஸ் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டு சூப்பர் நியூமரரி நிலை (Supernumerary position) என்ற வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.
கையூட்டு, முறைப்பாடுகளை தட்டிக்கழித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முறைப்பாட்டு கடிதங்களினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அச்சுவேலி போலீஸ் நிலையத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இடம்மாற்றி புதிய உத்தியோர்களை உள்வாங்க யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.