யாழ் மாநகர காவல்படை வழக்கை யாழ் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
யாழ்ப்பாணம மாநகர எல்லைப்பகுதிக்குள் சுகாதார விதிமுறைகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளிற்காக யாழ்மாநகரசபையினால் மாநகர காவல்படை உருவாக்கப்பட்டிருந்தது.
அதன் சீருடை, தமிழீழ காவல்த்துறையின் சீருடையை ஒத்ததாக இருப்பதாக தென்னிலங்கை இனவாதிகளும், வடக்கிலுள்ள தமிழ் தேசிய எதிர்ப்பாளர்களும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினர்.
இதை தொடர்ந்து யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டார். யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன், மாநகர காவல்ப்படை உறுப்பினர்கள் 5 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மாநகர காவல்ப்படையின் சீருடையும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கை தொடர போதிய ஆதாரங்கள் இல்லையென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்ததையடுத்து, நீதவான் வழக்கை தள்ளுபடி செய்தார்.
அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட சீருடைகளும் யாழ் மாநகரசபையிடம் மீள கையளிக்கப்பட்டது.




