புதிய ஜனாதிபதிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு.டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அவரது பேஸ்புக் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்ட பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
‘நான் எண்ணிக்கையால் தோற்கடிக்கப்பட்டாலும், எனது அரசியல் சித்தாந்தம் வெல்ல முடியாததாகவே உள்ளது. ஏனென்றால் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள 5.8 மில்லியன் குடும்பங்களுக்காகவே நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன். மாறாக பாராளுமன்றத்தில் உள்ள 225 குடும்பங்களுக்காக அல்ல. எது எவ்வாறாயினும், என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து கட்சிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.




