ரணில் வீட்டுக்கு தீ வைத்த முன்னாள் பிரதியமைச்சரின் மகன் நாட்டிலிருந்து வெளியேறினார்!

Date:

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு  தீ வைத்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரதி அமைச்சரின் மகன் கடந்த 10ஆம் திகதி இரவு டுபாய் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தப்பியோடிய சந்தேகநபரின் தந்தை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதியமைச்சர் எனவும், பின்னர் அவர் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதாகவும், தற்போது அவர் கொழும்பிற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் தொகுதி அமைப்பாளராக கடமையாற்றி வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த (9) ரணிலின் தனிப்பட்ட பங்களாவை மக்கள் படை கைப்பற்றிய பின்னர்,  அரசியல்வாதியின் மகனும் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குச் சென்று சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்..

“ஜனாதிபதி மாளிகையில் சோதனை நடத்தியது போல் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டையும் சோதனையிடப் போகிறோம். நாட்டை நேசிப்பவர்கள் அதற்காக வரவேண்டும்.
பிரதமர் பதவியை துறக்கப் போவதாக பிரதமர் வீடியோ ஒன்றை  வெளியிட்டார். அவரது
ராஜினாமா கடிதம் கிடைக்கும் வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்் என்றும் காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவாக அங்கிருந்து இந்த காணொளியை பதிவு செய்த பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல தடவைகள் கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அரசியல்வாதி ஒருவருடன் இந்த பெண் தொடர்பில் இருந்ததாகவும் அவருடன் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவங்கள் தொடர்பான அனைத்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் விவகாரத்தில் புதின் நியாயமாகவே நடந்து கொள்கிறார்: ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, ரஷ்யா "உக்ரைன் விவகாரத்தில் சரியாகவே...

கள்ளக்காதலை பெருமையடித்து திரிந்த செந்தூரன்: கடுப்பான கணவனின் விபரீத முடிவு!

நுரைச்சோலை, கரம்ப கார்மென்ட் வத்த பகுதியில், முறையற்ற உறவு தொடர்பான மோதல்...

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்