பொதுப்போக்குவரத்து சேவை பற்றிய பிந்திய தகவல்கள்!

Date:

பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று அல்லது நாளை நாட்டிற்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பெற்றோலுக்கான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பும் டீசல் ஏற்றிய கப்பல்கள் இரண்டு நாட்டிற்கு வந்துள்ளன.

இதேவேளை, குறிப்பிட்ட சில டிப்போக்களுக்கு உரிய நேரத்தில் எரிபொருள் கையிருப்பு கிடைக்கவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாளை தமக்கு தேவையான எரிபொருள் கிடைக்காவிட்டால், இலங்கை போக்குவரத்து சபை பஸ்களின் எண்ணிக்கை குறைவடையும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று போதியளவு எரிபொருள் கிடைத்தால் நாளை மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான தனியார் பேருந்துகளே தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புகையிரதங்கள் வழமையான கால அட்டவணையின்படியே இயங்குவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்