ஏஜெண்ட் ரணிலை பதவிவிலக வலியுறுத்தி நாளை போராட்டங்கள்!

Date:

ராஜபக்ஷக்களின் ஏஜெண்டாக செயற்படும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக வற்புறுத்தி நாளை (19) தீவிர போராட்டங்களில் ஈடுபடுவோம் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே நேற்று (17) பிற்பகல் தெரிவித்தார்.

நாளை முதல் அண்மைய நகரங்களுக்கு வந்து போராட்டங்களை நடத்துமாறு மக்களை கேட்டுக் கொள்வதாக வசந்த முதலிகே தெரிவித்தார்

முழு நாட்டையும் போராட்ட களமாக மாற்றுவதன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியதை போல, ராஜபக்ஷக்களின் ஏஜெண்டாக செயற்படும் ரணிலை பதவிவிலக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் போராட்டத்தை வெற்றியுடன் முடிக்க முடியும் எனவும் வசந்த முதலிகே மேலும் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் நேற்று (17) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய...

விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து மூட்டை கட்டிய பிக்குகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கைக்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள் மீட்பு

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்