50 கண்ணீர் புகை குண்டுகளுடன் நபர் ஒருவர் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரே ஒபேசேகரபுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சம்பவத்தின் போது பல கண்ணீர் புகை குண்டுகளும் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.




