நிலவும் நெருக்கடி நிலை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற அலுவல்களுக்கான குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
எவ்வாறாயினும், நாளை நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அபேவர்தன நேற்று அறிவித்தார்




