இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனிப்பட்ட முறையிலேயே சிங்கப்பூருக்கு வந்துள்ளதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் சமூக வருகை அனுமதியின்கீழ் அங்கு வந்துள்ளார். அவருக்கு அடைக்கலம் அளிக்கப்படவில்லை, அவர் அடைக்கலம் நாடவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூர் பொதுவாக அடைக்கலம் வழங்குவதில்லை என்றும் குறிப்பிட்டது.
பொதுமக்கள், சிங்கப்பூரர்கள், குடியிருப்பாளர்கள், வேலை அனுமதியில் இருப்போர், சுற்றுப் பயணிகள் ஆகியோர் உள்ளூர்ச் சட்டங்களை மதித்து நடக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது.
சட்டவிரோதமாகப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்போர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது தெரிவித்தது.
இதேவேளை, சவுதி எயார் லைன்ஸ் SV788 இலக்க விமானத்தில் கோட்டாபய பயணித்தார். விமானம் இன்று இரவு 7.17 மணியளவில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பொலிஸ் வாகனங்களின் பாதுகாப்புடன், 3 சொகுசு வாகனங்களை கொண்ட வாகன அணியில் கோட்டா விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்.




