மாலைதீவு தலைநகர் மாலேயில் தனியார் ஜெட் விமானம் ஒன்று சற்று முன்னர் தரையிறங்கியுள்ளது. அந்த விமானத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் செல்லவுள்ளார்.
கோட்டா, அவரது மனைவி அயோமா ராஜபக்சே மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று இரவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலேயில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தனர், ஆனால் பாதுகாப்பு காரணங்களால் திட்டமிட்டபடி செல்லவில்லை.
மாலைதீவில் இருந்து புறப்படுவதற்கு தனி ஜெட் விமானத்தை கோட்டா கோரினார். மேலும் மாலைதீவு அதிகாரிகளால் பேச்சுவார்த்தைகள் நள்ளிரவில் தொடங்கின.
இந்த ஜெட் விமானம் சற்று நேரத்திற்கு முன்னர் வெலனா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. கோட்டாபய ராஜபக்ச இன்னும் சிறிது நேரத்தில் மாலைதீவிலிருந்து புறப்படுவார்.
ஜனாதிபதி இன்று சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது பதவி விலகலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.