26.9 C
Jaffna
February 28, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

கோட்டா இன்னும் நாட்டிலேயே தங்கியுள்ளார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் நாட்டில் இருப்பதாகவும், இன்று காலை முப்படைத் தளபதிகளை சந்தித்ததாகவும் திருத்தப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.

ஜூலை 9 போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கையின் கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் இருந்த ராஜபக்சே, இன்று மீண்டும் தரையிறங்கி, முப்படைத் தளபதிகள் மற்றும் முப்படைத் தளபதிகளை காலையில் சந்தித்தார்.

ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் ராஜபக்ச, இந்த வார இறுதியில் வெளிநாடு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூலை 9 போராட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறி கடற்படை கப்பலில் தங்கியிருந்துள்ளார். அந்த கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் தரித்து நின்றுள்ளது.

இன்று காலை முப்படைத் தளபதிகளை சந்தித்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜூலை 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வார் என்றும், அதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இடைக்காலத்திற்கு ஜனாதிபதியாக பதவியேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

‘வடக்கு கிழக்கு மக்களின் ஆணையுடன் உருவான அரசாங்கம் இது’: ஐ.நாவில் சொன்னது அரசாங்கம்!

Pagetamil

உக்ரைன் போரில் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாட்டால் 3ஆம் உலகப்போர் வெடிக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கை!

Pagetamil

வரவு செலவு திட்டம்: 2ஆம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று

Pagetamil

ரஷ்யாவை கண்டிக்கும் ஐ.நா வரைவு, ஜி7 அறிக்கைகளில் கையெழுத்திட அமெரிக்கா மறுப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!