காஞ்சன கொண்டு வந்த எரிபொருள் கப்பல் காணாமல் போன கதை!

Date:

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான இலங்கையின் திட்டங்கள், சர்வதேச தடைகளால் வெளிநாட்டு வங்கிகள் கடன் கடிதங்களை திறக்க மறுப்பதால்,  தொடர்ந்து தடைபட்டு வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான நேரடி கலந்துரையாடல்கள் உட்பட, இலங்கைத் தலைவர்களுக்கும் பல்வேறு ரஷ்ய பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், கொடுப்பனவு பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

எனவே, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் மூன்றாம் தரப்பினருடன் ஓர்டர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது. அப்படியிருந்தும், எரிபொருளின் மூலம் குறித்து அறிந்தவுடன் சர்வதேச வங்கிகள் கடன் கடிதங்களை பதிவு செய்ய மறுக்கும் அபாயம் உள்ளது.

40,000 மெட்ரிக் தொன் எரிபொருள் ஏற்றுமதியானது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவுசெய்யப்பட்ட சப்ளையரிடமிருந்து ஓர்டர் செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் அறிவித்த போதிலும் அmந்த எரிபொருள் நாட்டுக்கு வரவில்லை.

இதுவும் அத்தகைய ஒரு ஏற்றுமதியாகும் என அதிகாரபூர்வமான வட்டாரங்கள் தெரிவித்தன.

பிசினஸ் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, 40,000 மெட்ரிக் தொன் உடனடி பணம் செலுத்தும் ஒப்பந்தம் கோரப்படாத முன்மொழிவை பரிசீலித்து டுபாயில் உள்ள ‘லேசர் ஹெட்’ என்ற சர்வதேச ரஷ்ய நிறுவனத்தின் உள்ளூர் ஏஜெண்டிடம் கொடுக்கப்பட்டது.
ஒப்பந்தத்தைப் பெற்ற பிறகு, நிறுவனம் தனது பெயரை ‘லேசர் ஹெட் இந்தியா’ என்றும், இரண்டாவது முறையாக ‘நைஸ் நிறுவனம்’ என்றும் ஆவணங்களில் கையெழுத்திடும் போது மாற்றியது.

இந்த கப்பலை இறக்குமதி செய்வதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் 42.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உறுதிசெய்யப்பட்ட கட்டுப்பாடுகள் மக்கள் வங்கியில் திறக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அது என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. இலங்கை பணத்தையும் கொடுக்கவில்லை.

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, பணம் செலுத்தும் முறைமையினால் சிக்கலாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தாய்ப்பாசத்தில் நாமலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாதாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

பல மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி அடர்ந்த காட்டு குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

சுமார் ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவரை,...

ரஷ்யாவிற்கு பிராந்தியங்களை விட்டுக்கொடுப்பதற்கு ஈடாக உக்ரைன் நேட்டோவில் சேரும் வாய்ப்பு: அமெரிக்கா புதிய முன்மொழிவு!

நவம்பர் 13 அன்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், டான்பாஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்