புதிய ஆணையுடன் அரசு அமையும் வரை போராட்டத்தை கைவிடக்கூடாது: ஜேவிபி

Date:

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகிய பின்னரும் போராட்டத்தை கைவிடக் கூடாது என ஜேவிபி இன்று தெரிவித்துள்ளது.

வெற்றியின் உண்மையான பலனை அறுவடை செய்ய புதிய ஆணையுடன் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை போராட்டம் தொடர வேண்டும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

‘இந்தப் போராட்டத்தின் நோக்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி நீக்கம் செய்வது மாத்திரமல்ல, 74 ஆண்டுகால தோல்வியடைந்த பொருளாதாரத்தை மாற்றியமைத்து அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

ஜனாதிபதி இராஜினாமா செய்த பின்னரும் தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு காணப்படாது எனவும், இந்த நெருக்கடி நிலையை தீர்க்க புதிய அரசாணையுடன் கூடிய புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

“சூழ்நிலையை சாதகமாக எடுத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க சில தரப்பினர் முயற்சிக்கின்றனர். தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியையும் பிரதமரையும் நியமித்து நாட்டை ஆள முயற்சிக்கின்றனர். இதுபோன்ற சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னரே இறுதி வெற்றியைப் பெற முடியும். தற்போதைய நாடாளுமன்றத்தின் மூலம் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசை அமைக்க வேண்டும், தேர்தலை நடத்துவதே அதன் முதல் பணியாக இருக்க வேண்டும்’’ என்றார்.

ஜனாதிபதி தனது ஆணை இப்போது நிராகரிக்கப்பட்டதை உணர்ந்து தனது இராஜினாமாவை அறிவிக்க வேண்டியிருந்தது. மேலும்பாராளுமன்றத்தின் ஆணையும் இப்போது நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

“இந்த நாடாளுமன்றம் நீண்ட நாட்கிற்கு செல்லாது. இந்த நெருக்கடியை தீர்க்கும் திறன் இந்த பாராளுமன்றத்திற்கு இல்லை. இந்த நாடாளுமன்றம் இப்போது நெருக்கடியைத் தீர்ப்பது நெறிமுறை மற்றும் ஜனநாயகம் அல்ல, ”என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்