பிரதமர் இராஜினாமா செய்வதெனில் 13ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்!

Date:

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தது யார் என்பதற்கான ஆதாரங்களை நாட்டுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இல்லத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார, இந்த சம்பவம் இனந்தெரியாத சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட தீவைப்பு தாக்குதல் என தெரிவித்தார்.

பிரதமர் விக்ரமசிங்க பதவி விலகுவாரா என ஊடகவியலாளர்கள் வினவிய போது, அந்தக் கேள்வியை பிரதமரிடமே கேட்க வேண்டும் என்றார்.

பிரதமர் விக்ரமசிங்க தனது இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு தனது இராஜினாமாவை எவ்வாறு தெரிவிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் இராஜினாமா செய்யுமாயின் அது எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்