ஆண் நண்பரின் வீட்டில் தங்கியிருந்த திருமணமான பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து, கணவரை தோளில் தூக்கி சுமந்து ஊர்வலமாக செல்ல வைத்த கொடுமை இடம்பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் தேவாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
உதய நகர் காவல் நிலையத்தில் தனது மனைவியை ஒரு வாரமாக காணவில்லை என்று பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் பேரில் போலீசாரின் விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர்.
இதற்கிடையில், அந்த பெண் தனது ஆண் நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து அங்கு சென்ற பெண்ணின் கணவர், அவரை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் வந்திருக்கிறார். பின்னர் ஊரார் முன்னிலையில் அவரை தாக்கி இருக்கிறார். அதன் பின்னர் ஊர் பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார்கள்.
பஞ்சாயத்தில் அந்த பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி அப்பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து, கணவரை தோளில் தூக்கி சுமந்து கொண்டு ஊர் முழுவதையும் சுற்றி வர வைத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் அந்த பெண்ணின் ஆண் நண்பர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு பதினைந்து வயதிலேயே திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். மேலும் கணவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் என்று புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரிலும் ஊர் பஞ்சாயத்து தண்டனையின் பேரிலும் ஏழு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
In Madhya Pradesh's Dewas district, people brutally beat up a "Tribal Woman" just because she went with her lover. Aren't we living in a free country @ChouhanShivraj ?? What was her fault??
Where is NDA's candidate for President election, Draupadi Murmu?? Why is she SILENT?? pic.twitter.com/o3afyRtW6U
— Rajasthan Congress Sevadal (@SevadalRJ) July 4, 2022
செருப்பு மாலையுடன் கணவனை தோளில் தூக்கிச் சுமந்து கொண்டு வரும் பெண்ணின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்து அதிர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.