27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கச்சா எண்ணெய் ஏன் இறக்குமதி செய்யப்படவில்லை?

கச்சா எண்ணெய் ஏன் இறக்குமதி செய்யப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேரத் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரிக்கப்பட்டால் நாட்டின் எரிபொருள் தேவையில் கணிசமான பகுதியை ஈடுசெய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

தினசரி 5,200 மெட்ரிக் தொன் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் 15 நாட்களுக்கு இயக்கப்பட்டால், மாதந்தோறும் ஒரு எரிபொருள் ஏற்றுமதி போதுமானதாக இருக்கும் என்றார்.

சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் 714,000 லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல், 1,860,000 லீற்றர் டீசல், 1,300,000 லீற்றர் மண்ணெண்ணெய் மற்றும் 1,400,000 லீற்றர் ஜெட் A1 எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹேரத் தெரிவித்தார்.

விமான எரிபொருளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 1 அமெரிக்க டொலர்களுக்கு விற்றால், அரசாங்கத்திற்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.

உள்ளூர் சுத்திகரிப்பு செயல்முறையின் மூலம் டொலர் தட்டுப்பாட்டையும் நிவர்த்தி செய்ய முடியும் என்றும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது கடினமான செயலாகும், அடுத்த வாரத்தில் கொள்முதல் செய்வதற்கான ஓர்டர்களை வழங்க முடியாது என்றார்.

கச்சா எண்ணெய்க்கான ஓர்டர் ஜூலை 15ஆம் திகதியும், மற்றுமொரு ஏற்றுமதி ஓகஸ்ட் 12ஆம் திகதியும் வரும் என்று அமைச்சர் விஜேசேகர குறிப்பிட்டார்.

அடுத்த வருடத்திற்கான டெண்டர்களை அழைப்பதற்கும் இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தனியார் மயமாக்கப்படாது என மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், அத்தகைய கூற்றுக்கள் அனைத்தும் பொய்யானவை எனவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment