வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடையவர் எரிபொருள் பெறுவதற்காக தனது அறுவடை இயந்திரத்தினை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்திவிட்டு, மைத்துனருடன் மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி சென்றுகொண்டிருந்தபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.
ஓமந்தையில் இருந்து பறன்நட்டகல் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தவரை அதே திசையில் பயணித்த கார் மோதியதில் 42 வயதுடைய பாலகிருஸ்ணன் என்ற நபர் பலியானதுடன் மைத்துனர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் ஓமந்தை பொலிஸார் காரின் இலக்கத்தினை அறிந்து குறித்த காரினை கைப்பற்றி ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஓமுந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




