40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், கப்பல் மேலும் ஒருநாள் தாமதமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாமதம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டளவு பெட்ரோல் மாத்திரமே இன்றும் நாளையும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஆட்டோ டீசல் முழு அளவில் விநியோகிக்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
மட்டுப்படுத்தப்பட்ட சுப்பர் டீசலை மாத்திரமே இன்று சந்தைக்கு விநியோகிக்க முடியும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சரின் கூற்றுப்படி, பெற்றோல் ஏற்றுமதிக்கு மேலதிகமாக, டீசல் ஒரு தொகுதி நாளை நாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1