அவுஸ்திரேலியாவிற்கு படகில் சென்றவர்கள் விமானத்தில் திரும்பி வந்தனர்!

Date:

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய கடலோரக் காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்பு, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனத் தெரியவந்த இந்தக் குழுவில் 35 பெரியவர்களும் 16 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகளும் அடங்குவர்.

100க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியப் படை வீரர்கள் அடங்கிய விமானத்தில், கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு இந்தக் குழு நாடு கடத்தப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த குழுவினர் நேற்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நேற்றிரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மர்லன் ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குழுவைச் சேர்ந்த 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஆட்கடத்தல் முயற்சியில் நேரடியாக ஈடுபட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்