பதுளையில் மின்னல் தாக்கத்தால் 3 பேர் வைத்தியசாலையில்!

Date:

நேற்று முன்தினம் (15) மாலை 5 மணி அளவில் பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 12 குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம்ஏற்பட்டுள்ளது

நேற்று மாலை பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் கடும் மழை மற்றும் மின்னல் தாக்கியுள்ளது. இதனால் குறித்த தோட்டத்திலுள்ள குடியிருப்புகள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன் மின் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.

குடியிருப்பில் வசித்த 3 பேருக்கு காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து உரிய அதிகாரிக்கு தெரிவித்துள்ள போதிலும் இதுவரையில் எந்த வித அரச அதிகாரிகளும் தமது அவதானத்தை செலுத்தவில்லை என அப்பிரதேச மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்

பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான மின்னல் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு மாவட்ட மின்சார சபைக்கு தெரிவித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் இவ்வாறான ஒரு மின்னல் தாக்கம் காரணமாக தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் உள்ள மின் உபகரணங்கள் தொலைக்காட்சி குளிர்சாதனப் பெட்டி வானொலி உட்பட சேதமாகி இருந்தது. இது தொடர்பில் முன்னதாகவே உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ள போதிலும் இதுவரையில் தொடர்ச்சியாக மின்னல் தாக்குதல் இடம்பெறுவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

-பதுளை இரா.சுரேஷ்குமார்-

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்