தண்ணீரை டீசல் என ரூ.24,000க்கு விற்பனை செய்து ஏமாற்றியவர்கள் மடக்கிப் பிடிப்பு!

Date:

கள்ளச்சந்தையில் டீசல் முயன்ற ஒருவரின் காதில் பூச்சுற்றப்பட்டுள்ளது. டீசல் என தண்ணீரை கொடுத்து, ரூ.24,000ஐ மோசடி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

பண்டாரகம பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

எரிபொருள் வரிசையில் நின்று கொண்டிருந்த இருவரை இரகசிமான அணுகிய ஒருவர், இரகசியமாக பதுக்கி வைத்திருந்த எரிபொருளை கொள்வனவு செய்ய விரும்புகிறீர்களா என கேட்டுள்ளார்.

பல நாட்களாக உணவு மற்றும் ஓய்வின்றி வரிசையில் நின்றிருந்ததால், குறித்த எரிபொருளை கொள்வனவு செய்ய சம்மதித்துள்ளனர்.

சந்தேக நபர் வழங்கிய 2 டீசல் கான்களை இருவரும் வாங்கினர். அவர்கள் ஆய்வு செய்தே வாங்கியதாக குறிப்பிடுகிறார்கள்.

ஒருவர் வாங்கி வைத்த டீசல் கானில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரே, டீசல் என்ற போர்வையில் தமக்கு தண்ணீர் விற்பனை செய்யப்பட்டுள்ளதை அவர்கள் அறிந்தனர்.

எனினும், சந்தேகநபர்களின் அடையாளம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

டீசல் என்ற பெயரில் தண்ணீர் விற்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இரவு பரவலாக சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. இதையடுத்து, நேற்று பண்டாரகம, ரைகம சந்தியில் சிறிய லொறியில் பொருள் விற்பனை செய்யும் இருவர் வாடிக்கையாளர்களை அணுகி, எரிபொருள் விற்பனை செய்ய முயன்றனர்.

இதை அறிந்த பிரதேச இளைஞர்கள், சமூக ஊடக தகவலினால் எச்சரிக்கையடைந்து, அந்த நபர்களிடம் எரிபொருள் வாங்க முடிவெடுத்தனர். அவர்கள் கொண்ட வந்த எரிபொருளை பொலித்தீன் பையில் விட்டபோது, மோசடி அம்பலமானது.

இதையடுத்து, அவர்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்