துறைமுக ஊழியர்களிற்கு விலை உயர்ந்த உணவு!

Date:

துறைமுகம் வழங்கும் உணவில் 45 சதவீதம் கஜூவிற்கு செலவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக மாற்று உணவை கண்டறியுமாறும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அமைச்சர் நேற்று (16) திடீர் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, உணவில் விலை உயர்ந்த கஜூ பயன்படுத்துவது தெரிய வந்தது.

துறைமுக சமையலறைகளில் ஒரு நாளைக்கு 5000 மதிய உணவுகளும் 3500 இரவு உணவுகளும் தயாரிக்கப்படுவதாகவும், ஒரு வேளை உணவு 450 ரூபாவை நெருங்குவதாகவும் அமைச்சரிடம் துறைமுக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டின.

1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட துறைமுக சமையல் கூடம் அதன் பின்னர் பௌதீக ரீதியாக புனரமைக்கப்படவில்லை எனவும் துறைமுக சமயலறை ஊழியர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். துறைமுக சமயலறையில் உள்ள எரிவாயு அடுப்புகள் மிகவும் பழமையானது எனவும் அதனால் எரிவாயு விரயமாகின்றது எனவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துறைமுக சமையலறையில் 169 பணியாளர்கள் இருந்த போதிலும் அவர்களுக்கு உரிய சுகாதார வசதிகள் இல்லை என்பதை அமைச்சர் கண்டறிந்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு துறைமுக திணைக்கள பிரதித் தலைவரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்