நிலக்கரி தணலின் மீது நடக்கும் பயிற்சியில் ஈடுபட்ட 25 பேர் கால்களில் தீக்காயமடைந்தனர். அவர்களில் 13 பேர் ஆபத்தான காயமடைந்துள்ளனர்.
சுவிற்சர்லாந்தின் சூரிச் கன்ரனில் Au peninsular என்ற இடத்தில் செவ்வாய் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கால்கள் எரிந்து படுகாயங்களுக்குள்ளானவர்களை ஏற்றிச் செல்லப் பத்து அம்புலன்ஸ் வண்டிகள் அவசரமாக அங்கு அழைக்கப்பட்டன.
தரையில் சில மீற்றர்கள் நீளத்துக்கு நிலக்கரி எரியூட்டப்பட்டுத் தணல் மேடை
உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றுக் கால்களுடன் நடந்து சென்றவர்களே
காயமடைய நேரிட்டுள்ளது.
சம்பவ இடத்தில் 25 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவர்களில் 13 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கார்ப்பரேட் நிகழ்வை சந்தைப்படுத்தல் நிறுவனமான கோல்ட்பேக் தனது துணிச்சல் மிக்க ஊழியர்களுக்காக இந்தத் தீ மிதிப்பை தனிப்பட்ட முறையில் ஒழுங்கு செய்திருந்தது.
சம்பவ இடத்தில் சுமார் 150 பேர் இருந்தனர்.
தனது ஊழியர்கள் எவரையும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை என்றும் விருப்பத்தின் அடிப்படையிலேயே அவர்கள் அதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.