உக்ரைனில் உக்கிர யுத்தம் நடக்கும் செவெரோடோனெட்ஸ்கில் பிராந்தியத்திலுள்ள அசோட் இரசாயன ஆலையின் நிலத்தடி அறைகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை உக்ரைன் இராணுவம் பயணக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உக்ரைனிலிருந்து பிரிந்த லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் ரஷ்ய ஆதரவு பிரதிநிதி ரோடியன் மிரோஷ்னிக் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.
பல நூறு பொதுமக்களை உக்ரைனிய இராணுவத்தினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
சுமார் 200 உக்ரைன் இராணுவத்தினர் மற்றும் செவெரோடோனெட்ஸ்க் பொதுமக்கள் சுமார் 600 பேர் உட்பட சுமார் 800 பேர் அசோட் தொழிற்சாலைக்கு அடியில் மறைந்திருந்ததாக உக்ரைன் கூறுகிறது.
300 முதல் 400 உக்ரைனிய இராணுவத்தினர் ஆலைக்குள் முற்றுகையிடப்பட்டதாக மிரோஷ்னிக் மதிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள செவெரோடோனெட்ஸ்கில் உள்ள அசோட் இரசாயன ஆலையின் கட்டுப்பாடு தம்மிடம் உள்ளது என்று பிராந்தியத்தின் ஆளுநர் கூறினார்.
“அசோட் ஆலை முற்றுகை பற்றிய ரோடியன் மிரோஷ்னிக்கின் தகவல் பொய்யானது” என்று லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் செர்ஹி ஹைடாய் கூறினார்.
“எங்கள் படைகள் செவரோடோனெட்ஸ்கில் ஒரு தொழில்துறை மண்டலத்தை வைத்திருக்கின்றன மற்றும் நகரத்தில் ரஷ்ய இராணுவத்தை அழித்து வருகின்றன.” சுமார் 200 இராணுவம் மற்றும் செவரோடோனெட்ஸ்கில் வசிப்பவர்கள் 600 பேர் உட்பட அசோட் ஆலைக்கு அடியில் உள்ள பல வெடிகுண்டு முகாம்களில் சுமார் 800 பேர் பதுங்கியிருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது.
லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் ரஷ்ய ஆதரவு பிரதிநிதி ரோடியன் மிரோஷ்னிக், 300 முதல் 400 உக்ரேனிய இராணுவத்தினர் பொதுமக்களுடன் ஆலையின் மைதானத்தில் முற்றுகையிடப்பட்டதாகவும், அவர்கள் லிசிசான்ஸ்க் நகருக்குச் செல்வதற்கு பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும் கூறினார்.
“அத்தகைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் விவாதிக்கப்படாது,” என்று மிரோஷ்னிக் கூறினார்,