யாழ்ப்பாணம், அரியாலையில் புகையிரத விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறப்பட்ட இரவு புகையிரதம், அரியாலை, மாம்பழம் சந்தியில் கார் ஒன்றுடன் விபத்திற்குள்ளானது.
காரில் பயணித்த இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் தென்பகுதியை சேர்ந்தவர்கள்.



