கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 91 பேர் கைது!

Date:

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 91 பேர் மாரவில மற்றும் சிலாபத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில மற்றும் சிலாபம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று முன்தினமும், நேற்றும் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மாரவில ஓய்வு விடுதியில் இருந்து 13 ஆண்கள், ஒன்பது வயது சிறுவன் மற்றும் கடத்தல்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை கடற்படையினர் கண்காணித்து 58 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் மற்றும் ஆறு கடத்தல்காரர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், கல்பிட்டி, சிலாபம், மாரவில மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

குறித்த குழுவினர் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்