யாழ் நகரப்பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளில் இன்று நடத்தப்பட்ட அதிரடி பரிசோதனையில், பல இளம் ஜோடிகள் சிக்கினார்கள். அவர்கள் அறிவுரை கூறி, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதிகளில் இன்று மாநகரசபையினர் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர்.
7 தங்கும் விடுதிகள் இன்று சோதனையிடப்பட்டன. அதில் ஒரு விடுதி பதிவு செய்யப்பட்டாதது.
இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பெரும்பாலான விடுதிகளில் இளைஞர்களும், யுவதிகளும் ஜோடியாக அறைகளில் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது சட்டநடவடிக்கையெடுக்க முடியாத போதும், அவர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாநகர எல்லைக்குள் உள்ள அனைத்து தங்குமிடங்களையும் கிரமமாக ஆய்வு செய்யவுள்ளதாகவும், அங்கு சிக்கும் ஜோடிகளின் பெற்றோரை அழைத்து அவர்களை ஒப்படைக்கவுள்ளதாகவும் மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.