நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது!

Date:

முச்சக்கர வண்டியில் சென்ற இருவர் நாயை தடியால் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பில் நாயின் உரிமையாளர் நேற்று (18) அக்மெமென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, 11.12.2024 அன்று முச்சக்கரவண்டியில் வந்த இருவர் தனது நாயை தாக்கியதாகவும் அதன் காரணமாக நாய் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

இதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த அக்மெமென பொலிஸார், காணொளியில் இருந்த நாயை தாக்கிய சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று முச்சக்கர வண்டியுடன் கைது செய்ய முடிந்தது.

34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள் படாதுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

1907 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின் கீழ், ஒருவர் மிருகத்தை கொடூரமாகத் தாக்குதல், துஷ்பிரயோகம் செய்தல், அலட்சியம் செய்தல், வாகனம், கூடையில் கொண்டு செல்வது, வலியை ஏற்படுத்துதல் போன்றவற்றின் கீழ் குற்றமாகும்.

இதன்படி, சந்தேகநபர்கள் இன்று (19) காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்