பண்டாரகமவில் சிறுமி ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த நபரின் உடலில் பல இடங்களில் கீறல்கள் காணப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்
சந்தேகநபரின் வீட்டின் படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சேறும் சகதியுமான சாரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
சிறுமி காணாமல் போன தினம் காலை 10.15 மணியளவில் பதிவான சிசிரிவி காட்சியில், சிறுமிக்கு அருகில் குறித்த நபர் காணப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலமும் அதனை அண்டிய புதரில் இருந்த சேற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் இரவு வேளை ஆயிஷாவின் வீட்டிற்குள் நுழைந்து தாய் மற்றும் மகளுடன் அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்னர் பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, ஆயிஷா வீட்டிலிருந்து புறப்பட்ட சமயத்திலேயே அவரது தந்தையும் புறப்பட்டு சென்றிருந்தார். இதனால் அவர் மீதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
தான் ஐஸ் போதைப்பொருள் வாங்கவே வெளியில் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.