இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை உரிய பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில், தம்மையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பிற்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை காரணமாக இன்னும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் மறைந்திருப்பதா தெரிவித்தார்.
21வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்காவிட்டால் கிராமத்திற்குத் திரும்ப முடியாது என ஓமல்பே சோபித தேரர் கூறியதன் மூலம் வன்முறைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அவர் அரசியலில் இருந்து ஒரு ரூபா கூட சம்பாதிக்கவில்லை உழைத்து சம்பாதித்த அனைத்து சொத்துக்களும் காட்டுமிராண்டிகளால் முற்றாக எரித்து நாசமாக்கப்பட்டுள்ள நிலையில் தான் இன்று இந்த நாட்டில் வீடற்றவனாக மாறிவிட்டதாக விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த தாக்குதல்கள் அனைத்தின் பின்னணியிலும் ஜே.வி.பி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.