வவுனியாவில் சமையல் எரிவாயு கறுப்பு சந்தைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா மாவட்டத்திற்கு என அனுப்பப்படுகின்ற சமையல் எரிவாயுவை பதுக்கும் சில விற்பனை முகவர்கள் அதனை வேறு இடங்களில் களஞ்சியப்படுத்தி விட்டு முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலரின் துணையுடன் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
12.5 கிலோ சமையல் எரிவாயுவே இவ்வாறு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சாதாரண மக்கள் பலரும் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதுடன், இது தொடர்பில் பாவனையாளர் அதிகார சபையினர் கூட கவனம் செலுத்தவில்லை எனவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1