25.1 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு தடை: மாவை, சத்தியலிங்கத்திற்கு அழைப்பாணை!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் இணை பொருளாளருமாகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளம்செழியனை கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான வழக்கு மீண்டும் 20.05 2022 விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது தொடர்ந்தும் 03.06.2022 வரை இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கு விசாரணையானது யாழ். மாவட்டநீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருளாளரும் , மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளம்செழியன் தம்மை கட்சியில் இருந்து, இலங்கை தமிழரசு கட்சி பதில் பொது செயலாளர் ப. சத்தியலிங்கம் நீக்கியது தவறு என யாழ். மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஊடாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பிரதிவாதிகளாக இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிர்வாக செயலாளர் சூ. சேவியர் குலநாயகம் மட்டும் அழைப்பானையை 28.04.2022 அன்று பெற்றிந்தார். அவர் 06.05.2022 அன்று நீதி மன்றில் பிரசன்னமாகியிருந்தார் ஆனால் 20.05.2022 இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொது செயலாளர் ப. சத்தியலிங்கம் நிர்வாக செயலாளர் சூ. சேவியர் குலநாயகம் ஆகியோர் நீதிமன்றில் பிரசன்னமாகவில்லை.

நீதிமன்ற கட்டானையை இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் இன்றுவரை பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஆகவே அவர்களுக்கு பகிரங்க அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

உயர்தரத்தில் கல்வி பயிலும் போதே மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலகுவது ஏன்? – ஹரிணி அமரசூரிய

east tamil

இலங்கையில் பிறப்பு வீதம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

east tamil

யாழில் புதுவருட அட்டகாசம்: வீதியில் சென்றவர்களை காரணமேயில்லாமல் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது!

Pagetamil

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

Leave a Comment