26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
இந்தியா

காதலன் ஏமாற்றியதால் விபரீத முடிவு: நடிகை ஷெரின் செலின் தற்கொலை!

மலையாள நடிகை ஷெரின் செலின் மேத்யூ காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மலையாள நடிகையும் மாடலுமான ஷெரின் செலின் மேத்யூ திருநங்கையாவார். கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடிகுடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (17) நீண்ட நேரமாக அவரது வீட்டுக்கதவு திறக்கபடாத நிலையில் உள்ளே சென்று பார்த்த போது செரின் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார்.

அவரது சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த கொச்சி போலீசார், இது தொடர்பாக, செரினின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

நண்பர்கள் இடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சினை காரணமாக ஷெரின் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள கணக்குகளில் மனவருத்தத்துடன் பல பதிவுகள் போட்டிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் வைத்து பிணக்கூறு ஆய்வும் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஷெரின் தற்கொலை தொடர்பாக நண்பர்களிடத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததில், ஷெரினுக்கு ஒரு காதலனை அடையாளம் கண்டனர். ஷெரினை உருகி உருகி காதலித்த அந்த இளைஞர், திருநங்கை என்பதை காரணம் காட்டி ஷெரினை கைவிட்டு சென்றுள்ளார்.

காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டிருக்கலாம் என்று நண்பர்கள் போலீஸிடம் தெரிவித்து உள்ளனர்.

போலீசாரின் விசாரணைக்கு பயந்து ஷெரினின் காதலன் தலைமறைவானதால் அவனைப் பிடித்து விசாரணை நடத்துவதற்காக பாலாரிவட்டம் போலீசார் தேடி வருகின்றனர்.

தன்னுடைய திறமையால் இளம் நடிகையாகவும், மாடலாகவும் ஜொலித்த ஷெரின் செலின் தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மணமகள் ‘லெஹங்கா’ அணியாததால் கத்திச்சண்டை போட்ட சம்பந்திகள்

Pagetamil

தங்கம் கடத்திய நடிகை கைது!

Pagetamil

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

Leave a Comment