நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை தோல்வி

Date:

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பை, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி உடனடியாக மேற்கொள்வதா என்பது குறித்த வாக்கெடுப்பு தோல்வியடைந்தது.

நிலையியற் கட்டளையின்படி, பராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மீதான வாக்கெடுப்பை உடனடியாக நடத்த முடியாது. சில நாள் அவதாகசத்தின் பின்னரே வாக்கெடுப்பை நடத்தலாம்.

எனினும், ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை நிலையியல் கட்டளைகளை மீறி நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் இலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில், பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதனால் நிலையியற் கட்டளைப்படி உடனடியாக வாக்கெடுப்பிற்கு வராது.அடுத்த வாரமளவில் வாக்கெடுக்கிற்கு விபப்படும்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்