நடிகையும், மொடல் அழகியுமான சஹானா, மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் அவரது கணவரின் சித்திரவதைக்கும் பங்கிருப்பதாக தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சஹானா (20). மொடல் அழகியான இவர், ஒரு சில தமிழ்,மலையாள படங்களிலும் நடித்துள்ளார். நகைக்கடை விளம்பரங்களில் நடித்து வருகிறார். தமிழில் இதுவரை வெளியாகாத லொக்டவுன் என்ற படத்தில் நாயாகியாக நடித்துள்ளார். இன்னொரு தமிழ் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
கடந்த ஆண்டு சஹானாவுக்கும், சஜாத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
கணவர் வீட்டில் வசித்த வந்த இவர்கள், அங்கு ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களாக கோழிக்கோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணியளவில் சஹானாவின் கணவர் சஜாத்தின் அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர். அப்போது சஜாத்தின் மடியில் சகானா இறந்த நிலையில் கிடந்தார். ஜன்னல் கம்பியில் தூக்குப் போட்டு சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறியபடி சஜாத் கதறி அழுதார்.
சஹானா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
சஹானாவின் கணவர் சஜாத்தை போலிசார் கைது செய்தனர்.
சஹானாவின் வீட்டில் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டன. தொடர்ந்து நடந்த விசாரணையில், உணவு விநியோகம் செய்யும் பாணியில் சஜாத் கஞ்சா விற்பது தெரிய வந்தது.
சஹானாவின் மரணம் நிகழ்ந்த சமயத்தில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது.
சஹானாவின் சம்பள பணத்தை கேட்டு, அவரது கால்களை கட்டி வைத்து கணவர் சஜாத் அடித்துக் கொன்றதாக குடும்பத்தினர் சஹானாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இறப்பதற்கு முந்தைய நாள் அம்மாவுக்கு போன் செய்து ஷஹானா அழுதார். தான் நடிப்பததால் கிடைத்த பணத்தை சஜாத் கேட்கிறார் என்றும், ஆனால் அந்த பணத்தை தனது தாயின் சிகிச்சைக்கு தருவதாகவும் கூறியுள்ளார்.
மறுநாள் தனது பிறந்தநாள் என்பதால் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டே தற்கொலை செய்தார்.
சஹானாவின் உடலை வீட்டிலிருந்து மீட்டவரர்கள், உடலில் கடுமையான அடி காயங்கள் இருந்ததாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனையில் தற்கொலை மரணம் என முடிவாகியுள்ளது. எனினும், சஹானாவின் உடலில் சிறிய வெட்டுக்காயங்கள் பல உள்ளன. அவர் பிளேட்டால் வெட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கும் போலீசார், அது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சஜாத் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், அவரது கெட்ட சகவாசம் குறித்தும் ஷஹானா முன்பு குடும்பத்தினரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, வீட்டுக்கு திரும்பி வருமாறு தாயார் பலமுற கேட்டுள்ளார்.
ஆனால் ஒவ்வொரு முறையும் சஹானா, கணவருடன் சமரசம் செய்துள்ளார்.
சஜாத் மே 28 வரை ரிமாண்ட் செய்யப்பட்டு மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டார்.