மஹிந்த ராஜபக்‌ஷவின் நாய்க்குட்டியை திருடிய யுவதி கைது!

Date:

வீரகெட்டியவிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் தோட்டத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி, தீ வைத்திருந்தனர். இதன் போது, மஹிந்த ராஜபக்‌ஷவின் நாய்க்குட்டி காணாமல் போயிருந்தது.

அந்த நாய்க்குட்டியை வைத்திருந்த யுவதி ஒருவரை வீரகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது வீட்டின் முன் நாய்க்குட்டி நின்றதாக கூறி, கார்ல்டன் தோட்டத்தில் நாய்க்குட்டியை மீள விட முயன்ற சமயத்திலேயே யுவதி கைதானார்.

வீரகெட்டிய பிரதேசசபையின் ஐ.தே.க. உறுப்பினர் ஒருவரின் மகளே கைதானார்.

திருடப்பட்ட நாய் அவரது பராமரிப்பில் இருந்த நிலையில், திருடப்பட்டவற்றை மீள ஒப்படைக்குமாறு பொலிசார் விடுத்த அறிவித்தலின் பிரகாரம், நாயை மீள கார்ல்டன் தோட்டத்தில் விட யுவதி முயன்றிருக்கலாமென கருதப்படுகிறது.

கைது செய்யப்பட்ட யுவதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்