இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (16) அதிகாலை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் தென்பட்டது.
சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும் போது பூமியின் நிழல் சந்திரனின் மீது படும் நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது நிலவு பழுப்பு நிறத்தில் தோன்றியது. புவியின் வளிமண்டலத்திலிருந்து சந்திரன் மீது விழுந்த ஒளி காரணமாக நிலவு பழுப்பாக தோன்றியது.
அது தவிர பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் மிகவும் குறையும் போது நிலவு பெரிய உருவத்தில் தோன்றுகிறது. இந்தாண்டு இந்த இரண்டு அதிசய நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




